மதுரை : மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட
கரட்டுப்பட்டி, மன்னாடிமங்கலம், ராயபுரம், ஆனைகுளம், திரு வேட கம் ஆகிய பகுதிகளில் தமிழக வெற்றி கழகம் சார்பாக நிறுவனத் தலைவர் நடிகர் விஜய் 51 வது பிறந்தநாள் விழாவையொட்டி, மதுரை மாநகர் வடக்கு மாவட்டச் செயலாளர் கல்லா னை வழிகாட்டு தலின்படி, ஏழை எளியவருக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கப் பட்ட து.
இந்த நிகழ்ச்சிக்கு, வழக்கறிஞர் தியாகராஜன் தலைமை தாங்கினார். உசிலை ராஜேஷ் முன்னிலை வகித்தார். இந்த விழாவில், புறநகர் மாவட்ட செயலாளர் விஷால் கிருஷ்ணன் நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கினார். இதில்,
நிர்வாகிகள் திருவேடகம் ஜோதி தென்கரை மோகன், குருவித்துறை பிரகாஷ் கண்ணன், திரவியம் குரு, பவித்ரன், நசீர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி