சிவகங்கை: சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் சாக்கோட்டை ஒன்றியம் சங்கராபுரம் ஊராட்சி அழகப்பா பொறியியல் கல்லூரி எதிரிலும், இழுப்பக்குடி ஊராட்சி அழகப்பா அரசு கலைக்கல்லூரி எதிரிலும், அமராவதி புதூர் ஊராட்சி தேவகோட்டை ரஸ்தா மற்றும் அமராவதி புதூரில் தலா ரூ7.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நான்கு புதிய பயணியர் நிழற்குடையினை காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி அவர்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்கள். இந்நிகழ்வில் காரைக்குடி மாநகராட்சி துணை மேயர் குணசேகரன், அரசு வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன், சாக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர், மதிமுக மாவட்ட செயலாளர் பசும்பொன் மனோகரன், அமராவதிபுதூர் கருப்பையா, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சொக்கலிங்கம், காங்கிரஸ், ருக்மா சரவணன், இரயில்வே கிட்டு தட்சிணாமூர்த்தி, முத்துகிருஷ்ணன், அப்பாவு ராமசாமி, அழகர், செல்வி, இந்திரா மற்றும் திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள், கிராம பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி