விருதுநகர்: தமிழ்நாடு” உறுப்பினர் சேர்க்கை கூட்டம் மல்லாங்கிணறி நடை பெற்றது. விருது நகர் வடக்கு. மாவட்ட தி.மு.க சார்பாக ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர். சேர்க்கை கூட்டம் நடை பெற்றது. கூட்டத்தில் நிதி அமைச்சரும், வடக்கு மாவட்ட கழக செயலாளருமான தங்கம் தென்னரசு தலைமை வகித்தார். நிர்வாகிகள் அனை வரும் முறையான திட்டமிடலும், ஒருங்கிணைப்புடனும் கழகத்தில் புதிய உறுப்பினர்களைச் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் கைபேசி செயலி உதவியுடன், புதிய உறுப்பினர்களைச் சேர்ப்ப தற்கான வழிமுறைகள் குறித்தும், தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மேற் கொள்ளும் நடவடிக்கைகள் குறித்தும், 2026 தேர்தலை தி.மு.க . . மீண்டும் வெற்றி பெற ஓரணியில் மக்களை அணி திரட்டும் உத்திகள் குறித்தும், இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் . ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் மற்றும். மூன்று தொகுதி களை உள்ளடக்கிய , மாநகர, நகர, ஒன்றிய, பேரூர் கழகச் செயலாளர்கள் மற்றும் மையப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி