திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சி மண்டலம் -4, வார்டு -38 வீனஸ் கார்டன் பகுதியில் “நமக்கு நாமே திட்டத்தின்” கீழ் தார் சாலை அமைக்கும் பணிகளுக்காக, பணியின் மொத்த மதிப்பீட்டுத் தொகையான ரூ.45 இலட்சத்தில்,வீனஸ் கார்டன் அசோசியேஷன் நிர்வாகிகள் பங்களிப்பு தொகையாக ரூ.15இலட்சத்திற்கான காசோலையை (26.5.2023) அன்று வீனஸ் கார்டன் அசோசியேஷன் நிர்வாகிகள், மாண்புமிகு மேயர் ந.தினேஷ்குமார் அவர்களிடம் வழங்கினர். உடன் பகுதி கழகச் செயலாளர் முருகசாமி அவர்களும்,38-வது வார்டு மாமன்ற உறுப்பினர் சாந்தாமணி அவர்களும்,43-வது வார்டு மாமன்ற உறுப்பினர் சாந்தாமணி அவர்களும்,34-வது மாமன்ற உறுப்பினர் செந்தில் அவர்களும் மற்றும் ஏராளமானோர் உடன் இருந்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி