மதுரை : மதுரை மாநகராட்சி பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்கள் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்வதற்கு வரம் தோறும் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை அன்று ஐந்து மண்டக்களுக்கு அந்தந்த மண்டல அலுவலகத்தில் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி மதுரை மாநகராட்சி மண்டலம் 4 அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்தம் தலைமையில் நடைபெற்றது.
இதில் அந்த பகுதியில் உள்ள வார்டுகளைச் சேர்ந்த பொதுமக்கள் குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு வீட்டு வரி பெயர் மாற்றம் புதிய சொத்து வரிவிதிப்பு கட்டட வரைபட அனுமதி தெரு விளக்கு தொழில் வரிக்கு உட்பட்ட தங்கள் கோரிக்கை மனுக்களை மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார். இதில் துணை மேயர் நாகராஜன் மண்டல தலைவர் முகேஷ் ஷர்மா மற்றும் மதுரை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி அதிகாரிகள் பொதுமக்கள் மற்றும் குறைதீர்க்கும் முகாமில் கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி