மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவுபடி மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் அவர்களால் சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை மானிய கோரிக்கையின் போது 500 மதுபான சில்லறை விற்பனை கடைகள் கண்டறியப்பட்டு மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி அறிவிப்பின்படி 500 மதுபான சில்லறை விற்பனை கடைகளை கண்டறிந்து மூடிட (20/4/2023) நாளில் அரசாணை எண் 140 ல் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை வெளியிட்டது. மேற்படி அரசாணையை செயல்படுத்தும் விதமாக மாநிலம் முழுவதும் உள்ள மதுபான சில்லறை விற்பனை கடைகளில் 500 கடைகளை கண்டறிந்து அவற்றை (22/6/2023) அன்று முதல் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளி-கல்லூரிகள் மற்றும் வழிபாட்டு தலங்கள் அருகே இருக்கும் கடைகள் மூடப்படுகிறது. மண்டல வாரியாக மூடப்படும் 500 டாஸ்மாக் கடைகளின் விவரங்கள் சென்னை மண்டலம் : 138 டாஸ்மாக் கடைகள், கோவை – 78, மதுரை – 125, சேலம் – 59, திருச்சி – 100 டாஸ்மாக் கடைகள் அதன் அடிப்படையில் மேற்குறிப்பிட்ட 500 மதுபான சில்லறை விற்பனை கடைகள் (22/6/2023) முதல் செயல்படாது என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
காஞ்சிபுரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ராஜ் கமல்