திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த தேவமாநகர் பகுதியை சேர்ந்தவர் வினோத் அண்ணலட்சுமி ஹோட்டல் வைத்து நடத்தி வருகிறார், இவர்களது மகன் காசிக் ராஜேந்திரா (4) பொன்னேரி அருகே உள்ள திரு ஆயர் பாடி தனியார் பள்ளியில் யுகேஜி படித்து வருகிறான் சிறு வயதிலிருந்தே சுறுசுறுப்பாகவும் டிவியை பார்த்து நடனம் ஆடியும் அருகில் உள்ள மாணவர்கள் படிக்கும்போது மாணவர்களின் பாடத்தை தாயிடம் சொல்வதும் ஏதாவது கேள்வி கேட்பதும் இருந்த நிலையில் அன்னலட்சுமி தனது மகனின் அறிவுத்திறனை பார்த்து காசி ராஜேந்திராவுக்கு வீட்டில் இருந்தபடியே படத்தைப் பார்த்து பெயர் சொல்வதும் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு கணிதங்கள் சர்வதேச நாட்கள் மாநிலங்கள், அவற்றின் சிறப்புகள் நாடுகளின் நாணயங்கள் குறித்து விளக்கம் உள்ளிட்டவை குறித்து சொல்லிய போது தனது அறிவுத்திறனை பயன்படுத்தி கவிஞர்கள் எழுதிய 70 கவிதைகளின் பெயர்கள், மற்றும் ,27 விஞ்ஞானிகள் கண்டுபிடித்த பெயர்கள் மற்றும் 50 நாடுகள் மற்றும்அவற்றின் நாணயங்கள் மற்றும் சேர்மங்களுக்கான 13 சூத்திரம் மற்றும் 23 சர்வதேச நாட்கள், மற்றும் 30 மாநிலங்கள் மற்றும் அவற்றின் சிறப்புகள் மொத்தம் 213 கேள்விகளுக்கு பதில் அளித்த நிலையில் குறைந்த நேரத்தில் 8 நிமிடம் 26 செகண்ட்டில் சரியாக பதிலளித்ததில் ட்ரம்ப் வேர்ல்ட் ரெக்கார்ட் சான்றிதழ் அளித்து பாராட்டி நினைவு பரிசு வழங்கியுள்ளது பள்ளி மாணவனின் அறிவு திறனை பாராட்டி ஆசிரியர்கள் மாணவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
திருவள்ளூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.மில்டன்