புதுக்கோட்டை: புதுக்கோட்டை கைக்குறிச்சி ஸ்ரீபாரதி மகளிர் கல்வி நிறுவனங்களின் வெள்ளிவிழா கொண்டாட்டத்தின் மூன்றாம் நாள் நிகழ்வில் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 17-வது ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக தொலைக்காட்சி புகழ் பட்டிமன்ற பேச்சாளர், கவிஞர் இராஜபாளையம் கவிதா ஜவஹர் கலந்து கொண்டு பேச்சு, கவிதைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பேரூரையாற்றியது-கல்லூரி என்பதும், பள்ளிக்கூடம் என்பதும் சாதாரண இடம் கிடையாது போட்டியில் கலந்து கொண்டு இன்று நீங்கள் வாங்கும் வெற்றி சான்றிதழ் நாளை இவ்வுலகில் உங்களுக்கு என்று தனி மரியாதையை உண்டாக்கும் வல்லமை அதற்கு உண்டு. இந்த உலகத்தில் யாருமே சாதாரண நபர்கள் கிடையாது நாம் படித்தோம், பணியில் அமரந்து நல்ல ஊதியம் பெறுகிறோம் என்பதற்காக மற்றவர்களை குறைத்து மதிப்பிட வேண்டாம். ஏனென்றால் நம்முடைய திறமை நமக்கு பெரிதாக தெரியும், ஆனால் அதைவிட பல்வேறு திறமைகளை வைத்துக் கொண்டு பலர் வெளியே காட்டுவதில்லை. சுய விளம்பரங்கள் தேடுபவர்களிடம் திறமை குறைவு, சமூக அக்கறை கொண்டவர்களுக்கு திறமை அதிகம். என்பதை நான் சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளேன்.
இதிலிருந்து நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் வழியில் செல்லுபவர்கள் கூட சாதாரண நபர் கிடையாது. அவரை சாதனை நபராக பார்க்க வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் உங்களிடம் இருக்க வேண்டும். வெறும் ஆறாம் வகுப்பு படித்த மாணவர்தான் காமராஜர்.
ஆனால் இன்றைக்கு தமிழ்நாட்டையே படிக்க வைத்திருக்கிறார். அதனால் கற்ற கல்வி என்பது பால் இல்லாமலும், சர்க்கரை இல்லாமலும் கிடைக்கும் தேநீர் போல, ஆனால் கற்ற கல்வியோடு உலக அறிவும் கூடவே இருந்தால் பாலும். சர்க்கரையும் சேர்;ந்த சுவையை நாம் சுவைக்கலாம். இதை ஏன் உங்களிடம் சொல்லுகிறேன் என்றால் பெண் பிள்ளைகளிடம் ஒரு விஷயத்தை சொன்னால் அவர்கள் சரியாக புரிந்து கொள்வார்கள். குடும்பங்களின் குட்டி, குட்டி தேவதைகள் யார் என்றால் அது பெண் பிள்ளைகளாக மட்டுமே தான் இருக்க முடியும். அதனால் தான் அப்பா சொல்வார்,அவள் எங்கள் ஆத்தாடா கையை வைத்தால் உடைத்து விடுவேன். பெண் பிள்ளைகளை பெற்ற அப்பாக்களுக்குத் தான் இரண்டு அம்மா ஒன்று அவரை பெற்ற அம்மா, மற்றொன்று அவர் பெற்றெடுத்த அம்மா. மென்மையான குணம் கொண்டவர், வெள்ளந்தியான மனது கொண்டவர்கள் பெண் பிள்ளைகள் என்பதை நான் தலை நிமிர்ந்து சொல்வேன். ஓட்டு போடுகிற வயதுக்கு நீங்கள் வந்துவிட்டீர்கள் நாட்டை யார் கையில் ஒப்படைக்க வேண்டும் என்ற மனப்பக்குவம் உங்களிடம் வந்து விட்டது. அதை தவறாக தீர்மானம் செய்து விட்டால் 5வருடம் தான் ஆனால் உங்கள் வாழ்வின் சரியான தீர்மானத்தை நீங்கள் எடுக்க தவறினால் ஆயுள் முழுவதும் அழிந்து போய் விடும். ஆகவே அவர் சொன்னார், தோழி சொல்லியது, உறவினர் சொன்னார்கள் அப்படி என்று நினைத்து ஏமாறாமல் உங்களுக்கான தீர்மானத்தை நீங்களே முடிவு செய்யுங்கள் என்றார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி