திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் கீழ்முதலம்பேடுமேல் முதலம்பேடுஏ என் குப்பம் புதுவாயல் பெருவாயல் தண்டலச்சேரிபன்பாக்கம் குருவாட்டுசேரி உள்ளிட்ட 8 ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் லட்சுமி தனியார் திருமண மண்டபத்தில் மனுக்களை வழங்கினர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கும்முடிபூண்டிவட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்திரசேகர் அமிழ்தமன்னன்ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். இதில் மாவட்ட குழு தலைவர் உமா மகேஸ்வரி ஊராட்சி மன்ற தலைவர் நமச்சிவாயம் பண்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன் ஒன்றிய கவுன்சிலர், ஜெயச்சந்திரன், இந்திரா, திருமலை, ஒன்றிய கவுன்சிலர் ஹேமாவதி உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் பல கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் காது கேட்கும் கருவி கேட்டு மனு அளித்த பன்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மேனகி என்பவருக்கு உடனடியாக காது கேட்கும் கருவியை
மாவட்ட குழு தலைவர் உமா மகேஸ்வரி வழங்கிப் பொருத்தினார். முகாமில்
வருவாய்த்துறை கூட்டுறவுத்துறை வேளாண்துறை உள்ளிட்ட17 துறை சார்ந்த அதிகாரிகள் பொதுமக்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்த மனுக்களை பெற்றுக்கொண்டு மனுக்களுக்கு தீர்வு காண நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு