செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு அடுத்த தேசிய இலஞ்ச ஊழல் எதிர்ப்பு இயக்கம் மற்றும் தேசிய நுகர்வோர் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலரின் பரிந்துரையின்படி திருக்கழுக்குன்றம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் பங்கு பெற்ற உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி வெங்கப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது.
இதில் திருக்கழுக்குன்றம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் பிரசாத் அவர்கள் மாணவர்களுக்கு உணவு பாதுகாப்பு பற்றியும், தவிர்க்க வேண்டிய உணவுகள் பற்றியும், கலப்பட உணவுகளை ஆராய்ந்து அறிந்து கொள்வதைப் பற்றியும் மற்றும் செறிவு ஊட்டப்பட்ட உணவுகள் பற்றியும் தெளிவாகவும் விளக்கமாகவும் மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
கலப்பட உணவுகளை கண்டறியும் முறைகளை செய்முறை விளக்கமாக செய்து காட்டியதை மாணவர்கள் ஆர்வமாக கண்டுகளித்தனர். இந்நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர், மற்றும் இருபால் ஆசிரிய பெருமக்கள், நெரும்பூர் குறுவட்ட ஆய்வாளர், ஊராட்சி மன்ற தலைவர், வார்டு உறுப்பினர்கள், தேசிய நுகர்வோர் மக்கள் பாதுகாப்பு இயக்க உறுப்பினர்கள் மற்றும் 600 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிமாணவர்கள் கலந்து கொண்டனர்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
அன்பழகன்