செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் பெருங்களத்தூரில் அமைந்துள்ள ஜி கே எம் பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரியில் 25 அக்டோபர் 2024 அன்று பட்டமளிப்பு விழா கொண்டாடப்பட்டது. ஜி கே எம் குருப் ஆஃப் இன்ஸ்டிடியுஷன்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர்.கே.சுஜாதா பாலசுப்பிரமணியன் அவர்கள் பட்டமளிப்பு தினத்தை அறிவித்தார்.
மேலும் விழா ‘ தமிழ் தாய் வாழ்த்து ‘ பாடலுடன் விழா தொடங்கப்பட்டது.
வரவேற்பு உரை மற்றும் ஆண்டு அறிக்கையை GKM பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரியின் முதல்வர் என்.எஸ்.புவனேஸ்வரி மற்றும் துணை முதல்வர் டாக்டர் வி. வெங்கடேசன் வழங்கினார்கள். விழாவின் தலைமை விருந்தினராக நீதிபதி எஸ். பாஸ்கரன் அவர்கள் சென்னை உயர்நீதி மன்றத்தின் முன்னாள் நீதிபதி மற்றும் தமிழ் நாடு மாநில உரிமைகள் ஆணையத்தின் முன்னாள் தலைவராக கலந்துக்கொண்டு பட்டமளிப்பு நாளின் சிறப்புரையையும் அண்ணா பல்கலைகழக ரேங்க் பெற்றவர்கள், மற்றும் முதல் இடம் பெற்றவர்களுக்கு பதக்கங்களையும் வழங்கினர்.
இதன் பின் எம் பி ஏ, எம் இ (சாப்ட் வேர்) இன்ஜினியரிங், எனர்ஜி இன்ஜினியரிங், ஸ்ட்ரக்சுரல் இன்ஜினியரிங், பி. இ ( ஏரோநாட்டிக்கல், சிவில் ஆட்டோமொபைல், பயோ மெடிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ், மற்றும் இன்ஜினியரிங் எலக்ட்ரானிக்கல் மற்றும் கம்யூனிகேஷன், எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்கல், மெரைன் , மெக்கானிக்கல் இன்ஜினியரிங்) மற்றும் B. Tech ( இன்ஃபர் மேஷன் டெக்னாலஜி) பட்டத்தாரிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.
பட்டத்தாரிகள் உறுதி மொழி எடுத்தனர், மேலும் தேசிய கீதத்துடன் விழா நிறைவு பெற்றது.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
அன்பழகன்