சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூரில் தமிழக வெற்றி கழகம் மற்றும் காரைக்குடி கேஎம்சி மருத்துவமனை இணைந்து இலவச மருத்துவ முகாம் நடத்தியது. தமிழக வெற்றி கழகம் கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய்யின் 33 ஆம் ஆண்டு திரைபயணத்தை வரவேற்கும் விதமாக திருப்புத்தூர் தவெக நகர இளைஞரணி சார்பில் இந்த மருத்துவ முகாம் நடைபெற்றது. நகர இளைஞரணி பொறுப்பாளர் உசேன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், திருப்புத்தூர், தென்மாபட்டு, தம்பிபட்டி, புதுப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர். இம்முகாமில் கேஎம்சி மருந்துவமனையின் பொது மற்றும் லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை நிபுணர் காமாட்சி சந்திரன், பொதுநல மருத்துவர் சுபாஷினி ஆகியோர் செவிலியர்களுடன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து ஆலோசனை வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் நோயாளிகளுக்கு சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், இசிஜி உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சிகளை என்.ரஞ்சித்குமார், ஐடியல்மாலிக், அப்துல்லா, மருதுசெந்தூரான், கார்த்திக்மனோ, பாருக், பொறியாளர் சையது ஜாபர் உள்ளிட்டோர் ஏற்பாடு செய்திருந்தனர். மாவட்ட இளைஞரணி நிர்வாகி ராஜாராம், மாவட்ட இளைஞரணி செயலாளர் திலீப்குமார், சதிஷ், காரைக்குடி நகர இளைஞரணி தலைவர் மணி, சிவகங்கை வடக்கு மாவட்ட தலைவர் ஜோசப் தங்கராஜ் மற்றும் திருப்புத்தூர் ஒன்றிய, நகர இளைஞரணி நிர்வாகிகள் மற்றும் ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி