சிவகங்கை : ஆயுஷ்மான் பாரத் சுகாதார கணக்கு அடையாள அட்டையானது 14 எண்கள் கொண்ட தனிப்பட்ட அடையாள அட்டை ஆகும். மேலும், ஆதார் அட்டையில் இணைக்கப்பட்ட தொலைபேசி எண் மூலம், ஆயுஷ்மான் பாரத் சுகாதார கணக்கு அடையாள அட்டையினை பெறமுடியும். காகிதமில்லா திட்டமான ஆயுஷ்மான் பாரத் சுகாதார கணக்கு திட்டத்தில் இணைவதன் மூலம், நாட்டில் எங்கிருந்து வேண்டுமானாலும் தங்களின் உடல்நலம் பற்றிய தகவல்களை, தங்களின் ஒப்புதலின் மூலம் அறிந்து கொள்ளலாம். இதனால், மருத்துவமனைக்குச் செல்கின்ற பொழுது, சுகாதார பதிவேடுகளை எடுத்துச் செல்ல வேண்டிய தேவை குறையும். இத்திட்டத்தின் மூலம் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் குறிப்பிட்ட மருத்துவ சேவைகளை கட்டணமில்லா பெற இயலும்.
இத்திட்டத்தின் மூலம் நடைமுறையில் உள்ள சுகாதார நலத்திட்டங்கைள ஆராய்ந்து மேன்மைப்படுத்தலாம். மேலும், ஆயுஷ்மான் பாரத் சுகாதார கணக்கு அடையாள எண் பெறுவதற்கு சிவகங்கை மாவட்ட அரசு சுகாதார நிலையம் மற்றும் மருத்துவமனைகளை அணுகலாம். ஆயஷ்மான் பாரத் அடையாள அட்டை மற்றும் அதன் சேவைகளை பெறுவதற்கென சிவகங்கை மாவட்ட சுகாதாரத்துறையினர் தங்களை தொடர்பு கொண்டால், உரிய ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என, மாவட்ட ஆட்சித்தலைவர்
ஆஷா அஜித், தெரிவித்துள்ளார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி