மதுரை: மதுரை, உசிலம்பட்டியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, 100க்கும் மேற்பட்ட மருத்துவ பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, உசிலம்பட்டி திமுக நகர் கழகத்தின் சார்பில் நகரச் செயலாளர் தங்கப்பாண்டி நலத்திட்ட உதவிகள் வழங்கினார். கடந்த 21ஆம் முதல் துவங்கி நான்கு நாட்கள் நடைபெற்ற இந்தநலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவை, தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன், மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் இணைந்து சலவை தொழிலாளர்கள், முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி துவக்கி வைத்தனர். நான்காம் நாளான இன்று உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் தற்காலிக பணியாளர்களாக பணியாற்றும் 100க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகளை உசிலம்பட்டி திமுக நகர செயலாளர் தங்கப்
பாண்டி தலைமையிலான திமுக நிர்வாகிகள் வழங்கினர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி