திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ள ஷைன் குளோபல் அறக்கட்டளை சார்பாக தமிழர் திருநாள் கொண்டாடப்பட்டது, ஷைன் குளோபல் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் திரு.ஏ.ஆரோன் அவர்கள் தலைமையில், அறங்காவலர்கள் திருமதி அம்மு ஆரோன், திருமதி ஜெமிமா அவர்கள் முன்னிலையில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் கும்மிடிப்பூண்டி மற்றும் எளாவூர் பகுதியை சார்ந்த நூற்றுக்கும் அதிகமான தூய்மை பணியாளர்களுக்கு நல திட்ட உதவிகள் மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினர்களாக திரு. இளஞ்செழியன் – நிதிச்செயலாளர், ஆதித்தமிழர் விடுதலை இயக்கம், ஜெ.யாபேஸ் பொதுச்செயலாளர் கிறிஸ்தவர்கள் ஐக்கிய நலவாழ்வு சங்கம், சமூக சேவகர்கள் திரு.விக்டர் திருமதி.எஸ்தர் விக்டர், திரு. பெர்னாண்டஸ் பிர்லா கார்பன், கும்மிடிப்பூண்டி சென்ட்ரல் லயன்ஸ் கிளப் வட்டாரத் தலைவர் தயாளன், தலைவர் லியோ சேகர், செயலாளர் முத்து, துணைத்தலைவர் காமராஜ், மாவட்டத் தலைவர் அப்துல் ஹமீத் மற்றும் கல்லூரியின் முதல்வர் பிரியதர்ஷினி, துணைமுதல்வர் சரண்யா மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்துகொண்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு