மதுரை: வாடிப்பட்டி பகுதியில் 76வது குடியர சு தினவிழா கொண்டாடப்பட்டது. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு நீதிபதி ராம கிஷோர் தலைமை தாங்கினார். நீதிபதி செல்லையா தேசிய கொடி ஏற்றி இனிப்பு வழங்கினார். வழக்கறிஞர் சங்கதலைவர் அரிச்சந் திரன், முத்துமணி, செயலாளர் முருகேசன், பொருளாளர் சிவராமன், துணைத் தலைவர் அழகேசன், அரசுவழக்கறிஞர் பார்த்தசாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் தலைவர் செல்வக்குமார் வரவேற்றார். இதில் வழக்கறிஞர் சங்கநிர்வாகிகள், நீதிமன்ற ஊழியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் முன்னாள் செயலாளர் முத்து ராமலிங்கம் நன்றி கூறினார்.
வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் ராமச்சந்திரன் தலைமை தாங்கி கொடியேற்றினார். வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் யூனியன் கமிஷனர் லட்சுமி காந்தம் தலைமை தாங்கி கொடியேற்றினார். வாடிப்பட்டி பேரூராட்சியில் நடந்த நிகழ்ச்சிக்கு பேரூராட்சிதலைவர் பால்பாண்டியன் தலைமை தாங்கி கொடியேற்றி இனிப்பு வழங்கி னார். துணைத்தலைவர் கார்த்திக் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் ஜெயலட்சுமி வரவேற்றார். இதில் பேரூராட்சி கவுன்சிலர்கள், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர். பொட்டுலுப்பட்டியில் அரசு உதவி பெறும் காந்திஜி ஆரம்பப்பள்ளியில் கல்விக்குழு தலைவர் பொறியாளர் தனபால் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் வெங்கடலட்சுமி
முன்னிலை வகித்தார். ஆசிரியர் ஆசீர்வாதம் பீட்டர் வரவேற்றார். பள்ளி செயலாளர் நாகேஸ்வரன் கொடியேற்றி இனிப்பு வழங்கினார். முடிவில் ஆசிரியர் ரெக்லின் எஸ்டர்டார்த்தி நன்றி கூறினார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி