திருவள்ளூர்: பொன்னேரி அருகே நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் கிராம ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம். 100 நாள் வேலை இழப்பு, வீட்டு வரி, குடிநீர் வரி பன்மடங்கு அதிகரிக்கும் அபாயம் இருப்பதால் ஊராட்சியாக நீடிக்க வேண்டும் என வலியுறுத்தல். எதிர்ப்பை மீறி இணைத்தால் ஆதார் அட்டை, குடும்ப அட்டை உள்ளிட்ட அரசு ஆவணங்களை ஒப்படைக்கவும் தீர்மானம். அண்மையில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு ஊராட்சிகளை மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுடன் இணைத்து அரசு அறிவிப்பு வெளியிட்டது. இந்த அறிவிப்பில் மீஞ்சூர் பிடிஓ அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள கொடூர் ஊராட்சியினை அதன் அருகே அமைந்துள்ள பொன்னேரி நகராட்சியுடன் இணைக்க அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கொடூர ஊராட்சி சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அண்மையில் குடியரசு தினத்தன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தையும் ஊராட்சி மக்கள் புறக்கணித்திருந்ததால் கூட்டம் நடைபெறவில்லை. இதனை அடுத்து கொடூர் ஊராட்சியில் இன்று சிறப்பு கிராம சபை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு