செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த சதுரங்கப்பட்டினம் கிராமத்தில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் தலைமை தாங்கினார்.
சென்னை அணு மின் நிலைய இயக்குனர், சேஷய்யா முன்னிலை வகித்தார். சதுரங்கப்பட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி சாமிநாதன், ஒன்றிய பெருந்தலைவர் S. A. பச்சையப்பன், ஊராட்சி உறுப்பினர்கள், மாணவ மாணவிகள் பெற்றோர்கள் ஊர் பொதுமக்கள் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். விழாவின் சிறப்பம்சமாக பள்ளியின் முன்னாள் மாணவர்கள் மூலம் ஆண்டுவிழாவிற்காக நன்கொடையாக ரூபாய் ஒரு லட்சத்துக்கும் அதிகமான தொகை நன்கொடையாக பெறப்பட்டது. மேலும் சதுரங்கப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர் நிலா கணேஷ் அவர்களும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். இவ்விழாவில் பள்ளி மேலாண்மை குழுவின் செயல்பாடுகள் குறித்த மலர், நன்கொடை அளித்த முன்னாள் மாணவர்களுக்கான நன்றி மலர் பள்ளி தலைமை ஆசிரியரிடம் வழங்கப்பட்டது. மேலும் கலை நிகழ்ச்சிகளும் விளையாட்டு மற்றும் போட்டி தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும் சிறப்பு விருந்தினர்களின் கரங்களால் வழங்கப்பட்டது. இறுதியில் நன்றியுரை நவில விழா இனிதே நிறைவடைந்தது.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அன்பழகன்