திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி அடுத்த மீஞ்சூரில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட பணிகள் சார்பாக சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்டார். பின்னர் கர்ப்பிணி பெண்களுக்கு மாலை அணிவித்து கைகளில் வளையல் போட்டு அவர்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டு உட்டசத்து பொருட்கள் வழங்கப்பட்டன. பின்னர் கருவுற்ற தாய்மார்கள் கருவுற்ற நாளில் இருந்து எவ்வாறு நடந்து கொள்வது என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டு கர்ப்பினி தாய்மார்களுக்கு மரச் செடிகள் வழங்கி சீதன பொருட்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் மோகனா, மீஞ்சூர் தேர்வு நிலை பேரூராட்சி மன்ற தலைவர் ருக்மணி மோகன்ராஜ், திமுக பேரூர் கழக செயலாளர் தமிழ் உதயன், பேரூராட்சி துணைத்தலைவர் அலெக்சாண்டர்,செயல் அலுவலர் மகேஸ்வரி, வார்டு உறுப்பினர்கள் அபூபக்கர், சோனியா, வட்டார ஒருங்கிணைப்பாளர் சுச்சிதா முதல் நிலை மேற்பார்வையாளர் ஜமுனா ராணி, மற்றும் மேற்பார்வையாளர்கள் கீதா, சுகுணா, எஸ்தர், சுமதி காங்கிரஸ் நிர்வாகிகள் நகரத் தலைவர் அன்பரசு, எத்திராஜ், அத்திப்பட்டு புருஷோத்தமன், நந்தகுமார், உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு