மதுரை: பிரதமர் மோடி குறித்தும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறித்தும் தவறாக பேசி மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் வீடியோ ஒன்று வெளியிட்டு இருந்தார்.இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியதை தொடர்ந்து,
பாஜகவினர் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பிரதமர் மோடியையும் பாஜக தலைவர் அண்ணாமலையும் தவறாக சித்தரித்து வீடியோ வெளியிட்ட பசும்பொன் பாண்டியனை, காவல்துறை இதுவரை கைது செய்யவில்லை. அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, மதுரை மேற்கு மாவட்ட பாஜக தலைவர் சிவலிங்கம் தலைமையில் திருமங்கலம் ராஜாஜி சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, பசும்பொன் பாண்டியனை கைது செய்ய வலியுறுத்தி 50க்கும் மேற்பட்ட பாஜகவினர் கண்டன கோஷங்கள் எழுப்பினர். இதனைத் தொடர்ந்து, திருமங்கலம் நகர் காவல் நிலைய போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சம்பந்தப்பட்ட பசும்பொன் பாண்டியனை உடனடியாக கைது செய்ய வேண்டும் தவறும் பட்சத்தில் பாஜக தொண்டர்கள் அனைவரும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தனர்.
தொடர்ந்து, காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மதுரை மேற்கு மாவட்டத்தலைவர் சிவலிங்கம் தமிழக முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் குறித்துபேசினால் உடனடியாக கைது நடவடிக்கையில் ஈடுபடும் தமிழக காவல்துறை
பாரதப் பிரதமரையும் பாஜக தலைவரின் தவறாக சித்தரித்து வீடியோ வெளியிட்டு தொடர்பாக காலையிலேயே புகார் அளித்தும் , இதுவரை காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவே, பிரதமர் குறித்து தவறாக வீடியோ வெளியிட்ட அந்த நபரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்துவதாக தெரிவித்தார். தொடர்ந்து, திமுகவினரும் திமுக நிர்வாகிகள் நடத்தும் பள்ளிகளில் அனைத்து மொழிகளையும் கற்பிக்கிறார்கள் ஆனால் மற்ற யாரும் ஹிந்தி கற்றுக் கொள்ளக் கூடாது என்பதற்காக திமுகவினர் எதிர்க்கிறார்கள் என, தெரிவித்தார்.
ஆர்ப்பாட்டத்தில், துணைத் தலைவர் சரவணகுமார், மாவட்ட பொதுச் செயலாளர் பாரதிராஜா, மாவட்டச் செயலாளர்கள் தமிழ்மணி, சின்னச்சாமி, இளையராஜா, நகர தலைவர் சசிகுமார் உடன் இருந்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி