திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த பழவேற்காட்டில் உள்ள சாட்டாங்குப்பம் மீனவ கிராமத்தில் அதானி துறைமுகத்தில் சி எஸ் ஆர் நிதியின் மூலமாக சுமார் 38 லட்சம் ரூபாய் செலவில் புதிய சமுதாயம் கூடம் கட்டித் தரப்பட்டது. மேலும் மாற்றுத்திறனாளிகள் 15 பேருக்கு பேட்டரியால் இயங்கும் மின்சார வண்டி கொடுக்கப்பட்டது. நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் ஐ.ஏ.எஸ் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு மின்சார வண்டியையும் சாட்டாங்குப்பத்தில் புதிய சமுதாய குலத்தையும் திறந்து வைத்தார். இவை அனைத்தும் காட்டுப்பள்ளி அமைந்துள்ள அதானி துறைமுகத்தின் மேம்பாட்டு நிதியின் கீழ் வழங்கப்பட்டது. என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நிகழ்ச்சியில் இயற்கை முறைப்படி விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு அவர்களின் பொருள்களை எந்த முறையில் விற்பனை செய்ய வேண்டும் என்பது குறித்து விளக்கம் அளித்தார்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு