மதுரை: தமிழகத்தில் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்தும் விலைவாசி உயர்வை கண்டித்தும் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் சோழவந்தானின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது மாவட்ட அம்மா பேரவை தலைவர் தமிழழகன் தலைமை தாங்கினார். அமைப்புச் செயலாளர் மகேந்திரன் முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் முன்னாள் எம்.எல். ஏஎம்.வி கருப்பையா முன்னாள் யூனியன் சேர்மன் ராஜேஷ் கண்ணா அம்மா பேரவை வெற்றிவேல் துரை தன்ராஜ் பேரூர் செயலாளர் முருகேசன் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ஜெயக்குமார் அவைத்தலைவர் முசி சோ முருகன் இளைஞர் அணி கேபிள் மணி பேரூராட்சி கவுன்சிலர்கள் ரேகா ராமச்சந்திரன் டீக்கடை கணேசன் தியாகு பத்தாவது வார்டு மணி ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள்.
அதிமுக மற்றும் திமுக ஆட்சியில் விலைவாசி உயர்வு வேறுபாடு மற்றும் கட்டுமான பொருட்களின் விலை உயர்வு பற்றிய விவரங்கள் அடங்கிய துண்டு பிரசுரம் பேருந்துகளிலும் பேருந்து நிலையங்களில் உள்ள பொது மக்களிடமும் வழங்கப்பட்டது. தொடர்ந்து சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் பெரிய கடை வீதி மார்க்கெட் ரோடு மார்க்கெட் பகுதி பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து வழங்கினார்கள். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் மதுரை மேற்கு தெற்கு அரியூர் ராதாகிருஷ்ணன் செல்லம்பட்டி எம் வி பி ராஜா சிவசக்தி அம்மா பேரவை மனோகரன் எம்.கே முருகேசன்பேட்டை மருது சேது பாலா சிலம்பு செல்வன் கச்சராயிருப்பு முனியாண்டி மன்னாடி மங்கலம் தெற்கு கிளைச் செயலாளர் ராஜபாண்டி கல்லாங்காடு கிளைச் செயலாளர் ராமு நிர்வாகிகள் அழகுமலை புதுப்பட்டி பிரபாகரன் கருப்பு முப்பிலி இரும்பாடி சக்திவேல் மேலக்கால் காசி லிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி