திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியின் துவக்கமாக அரியன்வாயல் மார்கெட் பகுதியில் எஸ்.டி.பி.ஐ கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. அப்போது கூட்டணி கட்சியான அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன், திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் சிறுணியம் பலராமன் மற்றும் அதிமுக முக்கிய நிர்வாகிகள் ராகேஷ், முத்துக்குமார், செல்வகுமார், பட்டாபிராமன், மாரி, எம்.வி.எஸ். தமிழரசன், மீஞ்சூர் தேர்வு நிலை பேரூராட்சி அரியன் வாயல் இரண்டாவது வார்டு செயலாளர் பி.எம்.அஸ்கர் அலி
உள்ளிட்டோர் இப்தார் விருந்தில் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர் நடைபெற்ற இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு நோன்பு திறந்தனர்.
எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதத்தில் பொன்னேரி தொகுதி தலைவர் சையது புகாரி தலைமையில் நடைபெற்ற தொழுகையில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொதுச்செயலாளர் ஜி.பாசித்,மாவட்ட பொருளாளர் ரஃபியுல்லா, மாவட்ட துணை தலைவர் சையது அப்துல் காதர், மாவட்ட செயலாளர் ஹபீப் ரஹ்மத்துல்லா, தொகுதி செயலாளர் பீர் முஹம்மது,பொருளாளர் பழவை அலி, தொகுதி துணை தலைவர்கள் முஜிப் ரஹ்மான், முகமது அன்சாரி, தொகுதி இணைச் செயலாளர்கள் மௌலு, அகமத் மதார்,தொகுதி செயற்குழு உறுப்பினர் தமீமுன் அன்சாரி கிளை மற்றும் தொகுதி,நகரம், பேரூர், கிளை நிர்வாகிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அப்பகுதி குடியிருப்பு வாசிகள் பலர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு