காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் R.N.கண்டிகை கிராமத்தில் 189 ஆண்டுகளாக தலித் கிறிஸ்தவர்கள் மீது சாதிய தீண்டாமையை தொடர்ந்து கடைபிடித்து வரும் நாயுடு கிறிஸ்தவர்களுக்கு எதிராக 1998 இல் சமாதான கூட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது அதைத் தொடர்ந்து 14-12-2001 மற்றும் 21-12-2001 இல் மாவட்ட ஆட்சியர் வழியாக நாயுடு, ஆதிதிராவிடர், அருந்ததியர், மற்றும் ஆயர் இல்ல நிர்வாகம், காவல்துறை, வருவாய்த்துறை முன்னிலையில் சமாதான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதை தொடர்ந்து ஊரில் ஒரே கோவில் அமைத்து அனைத்து சாதியினரும் ஒன்றாக வழிபட வேண்டும் ஒரே திருவிழா ஒரே திருப்பலி ஒரே கல்லறை அமைக்க வேண்டும் என 2003இல் சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பு வழங்கியது, இதை ஏற்க மறுத்த நாயுடு சமுதாயத்து மக்கள் 27 ஆண்டுகளாக நீதிமன்ற உத்தரவை மறுத்து எங்களிடம் சாதிய தீண்டாமையை கடைபிடிக்கின்றனர். இதை கண்டித்து செங்கை கத்தோலிக்க ஆயர் இல்ல முற்றுகை மற்றும் கோரிக்கை மனு அளிக்கும் போராட்டம் செல்வராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் தலித்கிறிஸ்தவ நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அன்பழகன்