சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சி, பெரியார்சிலை முதல் புதிய பேருந்து நிலையம் வழியாக இரயில்வே நிலையம் செல்லும் சாலை சந்திப்பு வரை உள்ள 100-அடி சாலையையும், அதே போன்று கல்லூரிச்சாலை, சுப்பிரமணியபுரம் 1-வது வீதி தெற்கு பிரிவிலிருந்து, நீதிமன்றம் வழியாக முடியரசனார் சாலை, இரயில்வே நிலையத்தில் இருந்து பழைய அரசு மருத்துவமனை செல்லக்கூடிய சாலை சந்திப்பு வரை ஆகிய இரண்டு சாலைகளையும் மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றி நெடுஞ்சாலைதுறைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு சாலைகளும் பொதுமக்கள், வாகனங்கள் அதிகமாக செல்லும் முக்கிய சாலைகளாக இருப்பதால், சாலையின் இருபுறமும் மழைநீர் கால்வாய் அமைத்து நான்கு வழிச்சாலையாக அமைக்கப்படுமா ?
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டம் காரைக்குடி மாநகராட்சி பகுதி அதிகளவு மக்கள் தொகை கொண்ட பகுதியாகும். தேவகோட்டை அதனை சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் இருந்து தினம்தோறும் அதிகளவில் பல்வேறு பணிகள் தொடர்பாக வந்துசெல்வதால் நகர் பகுதிக்குள் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை தவிர்ப்பதற்காக அரியக்குடி ரயில்வே கேட் வடக்குப்பகுதியிலிருந்து சத்தியமூர்த்திநகர் கணேசபுரம் வழியாக அரியக்குடி குடிகாட்டான்பட்டி சாலை வழியாக தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் வகையில் புறவழிச்சாலை அமைக்கப்படுமா என காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி கோரிக்கை வைத்தார். அதற்கு பதிலளித்த மாண்புமிகு நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் அவர்கள், சாலை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா என ஆய்வு செய்த பிறகு சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்கள்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி