மதுரை : மதுரை திருமங்கலம் அருகே, பொக்ககம்பட்டி கிராமத்தில் பூத் முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. முகவர்கள் 9 பேர் நியமனம் செய்து அவர்களை அறிமுகம் செய்து வைத்து அவர்கள் உடைய பொறுப்பு குறித்தும் பேசினார். இப்போது, ஆண்டு வரும் திமுக அரசு நான்கு ஆண்டுகளில் எந்த திட்டமும் கொண்டு வரவில்லை. ஆனால் 90% திட்டங்களை நிறைவேற்றி விட்டோம் என முழு பொய் சொல்லி வருகிறார். அதிமுக ஆட்சி காலத்தில் கொரோனா இருந்த காலத்திலும் கூட 100 நாள் சம்பளம் தடையில்லாமல் வழங்கப்பட்டது. தற்போது உள்துறை அமைச்சர் அமித் ஷாவை எடப்பாடி சந்தித்து 100 நாள் சம்பளத்தை விடுவிக்க கோரிக்கை விடுத்தார். அதன் அடிப்படையில், 2999 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆட்சி அதிகாரத்திற்காக அதிமுக சேவை செய்யவில்லை. அதிகாரத்தில் இல்லாதபோதும் கூட மக்களுக்காக நிதியைப் பெற்று மக்கள் வளர்ச்சி பாதைக்கு ஒட்டி செல்ல கூடியவர் தான் எடப்பாடி அந்த அளவிற்கு மக்கள் மீது அக்கறை கொண்டவர்.
52 ஆண்டு காலம் அதிமுக ஆட்சியில் இருந்த சேவை செய்தது அதிமுக தற்போது ஆட்சியில் இல்லாத போதுசேவை செய்து வருகிறோம். அம்மா திடலில் 120 திருமணம்
உள்ளிட்ட பல நலத்திட்டம் உதவிகளை கொண்டு வந்தது அதிமுக ஆட்சி. 2026 தேர்தலில் நியாயமான தீர்ப்பு வழங்க வேண்டும். திமுகவின் வாழையடி வாழையாக தான் ஆட்சிக்கு வருவார்கள். அதிமுகவில் கிளைக் கழகத் தொண்டர் கூட பெரிய பதவிக்கு வர முடியும். இந்த நிகழ்ச்சியில், ஒன்றியச்செயலாளர் அன்பழகன், பொருளாளர் சாமிநாதன்,
கலை பிரிவு மாவட்ட செயலாளர்வாகை சிவசக்தி உள்ளிட்டவர்கள்
கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி