செங்கல்பட்டு: தேசிய இலஞ்ச ஊழல் எதிர்ப்பு இயக்கம் மற்றும் தேசிய நுகர்வோர் மக்கள் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த சதுரங்கப்பட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் செவிலியர்களுக்கு உலக செவிலியர் தின விழா வாழ்த்துக்களுடன் நினைவு பரிசு வழங்கி உலக செவிலியர் தின விழா கொண்டாடப்பட்டது. செவிலியர்களின் தியாகம் அர்ப்பணிப்பு பொறுமை சகிப்புத்தன்மை போன்ற சிறப்புகளை நினைவு கூறி அவர்களின் எதிர்கால பணி சிறக்க வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்வில் சதுரங்கப்பட்டினம் அரசு மருத்துவ செவிலியர்கள், தனியார் மருத்துவமனை செவிலியர்கள் (பாலகணபதி கிளினிக்) மற்றும் தேசிய இலஞ்ச ஊழல் எதிர்ப்பு இயக்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அன்பழகன்