திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட மே (14-05-2025) 1987-89ஆம் கல்வி ஆண்டில் ஆசிரியர் பயிற்சி மையத்தில் உடன் பயின்ற ஆசிரியர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா திருவள்ளூர் லட்சுமி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சியை திரு.N.பழனி அவர்களின் தலைமையில் திரு.கஜேந்திரன் ரோஸ்ரெட்டி முன்னிலையில் நடைபெற்றது. திரு. கா.அர்ச்சுனன் வரவேற்புரை வழங்கினார். நிகழ்ச்சியில் திரு S.பரமசிவம் ப.ஆ. (கணிதம்), திரு S.சங்கரன் (விடுதி காப்பாளர்) மற்றும் திரு S.ஜெகதீசன் ப. ஆ (தமிழ்) ஆகியோர்களுக்கு பணி நிறைவு பாராட்டுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். மேலும் திரு.கிருஷ்ணன், பிரசாந்த், இராமமூர்த்தி, வேல்முருகன், S.முருகன், M.சங்கர், S.சங்கர். பார்த்திபன், வேலுச்சாமி, மூர்த்தி, V.P ஏழுமலை ஆகியோர் பணி நிறைவு பெற்றவர்களை பாராட்டி நினைவு பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியின் நிறைவில் திரு.கருணாமூர்த்தி நன்றியுரை வழங்கினார்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு