மதுரை: மதுரை, உசிலம்பட்டி அருகே அதிமுக முன்னாள் முதல்வரும் பொதுச்
செயலாளரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி ஒன்றியத்திற்
குட்பட்ட பன்னியான் கிராமத்தில், அதிமுக முன்னாள் முதல்வரும் பொதுச்
செயலாளரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிச்சாமி 71- வது பிறந்த நாளை முன்னிட்டு,100 கோவில்களில் வழிபாடு, 100 நாட்களுக்கு அன்னதானம்
வழங்கும் நிகழ்வில், முன்னாள் அமைச்சரும் எதிர்கட்சி துணைத் தலைவருமான ஆர்.பி.உதயக்குமார் பங்கேற்று பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதற்கு முன்னதாக, பன்னியான் கிராமதிற்கு அருகில் உள்ள கணவாய் கருப்பசாமி
கோவிலில் சாமிதரிசம் செய்தனர். இதில், செல்லம்பட்டி ஒன்றியச்
செயலாளர் ராஜா, கழக அமைப்பு செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ. வுமான ,
ஐ. மகேந்திரன், மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் துரை தனராஜ், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் ரகு மற்றும் அதிமுக முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி