சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வித்யாகிரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் தேசிய மருத்துவர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு பள்ளி முதல்வர் ஹேமமாலினி சுவாமிநாதன் தலைமை வகித்தார். மருத்துவர்களின் மகத்தான மற்றும் தன்னலமற்ற சேவையை பாராட்டினார். காரைக்குடி பிரபு டென்டல் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர். பிரபு மற்றும் காரைக்குடி C.S. மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர்.ஸ்டாலின் ராஜா சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். காரைக்குடி நகரில் சிறந்த மருத்துவர்களாக உள்ள இந்த இரு மருத்துவர்களின் சேவையைப் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர். மாணவ மாணவியர் மருத்துவர் வேடமணிந்து விழாவில் பங்கேற்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளியில் துணை முதல்வர் சத்தியமூர்த்தி அவர்கள் மற்றும் ஆசிரிய ஆசிரியைகள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி