கொரோனா வைரஸ் தொற்று கண்ணீர் மூலம் பரவ வாய்ப்பு உள்ளதாக கண் மருத்தவர்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து அகர்வால் கண் மருத்துவமனை மருத்துவர் பிரீத்தி பேசிய போது, கொரோனா வைரஸ் காய்ச்சல், இருமல், தொண்டை வலி போன்ற அறிகுறிகளுடன் சேர்த்து, கண் சிவப்பாக இருத்தல், கண் எரிச்சல் , கண் நீர் வடிதல் போன்ற அறிகுறிகளும் சேர்ந்து தெரியவாய்ப்பு இருப்பதாக கண் மருத்துவர்கள் தகவல்கள் வெளியிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும், கண் வழியாகவும் கொரோனா வைரஸ் பரவ வாய்ப்பு உள்ளதாகவும், கண்களை கைகளால் தொட கூடாது எனவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
ஒருவருக்கும் வெளியேறும் கண்ணீர் துளிகள் படிந்த இடத்தை தொட்டால் கூட கொரோனா வைரஸ் மற்றவர்களுக்கு பரவு வாய்ப்பு உள்ளதாக கண் மருத்துவர்கள் ஆய்வில் கூறியுள்ளதாகவும் மருத்துவர் பிரீத்தி தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டிலிருந்தே அலுவலக வேலை செய்பவர்கள் தொடர்ந்து லாப்டாப், டேப், மொபைல் போன் போன்றவற்றை உபயோகப்படுத்தாமல் 20 நிமிடத்திற்கு ஒரு முறை 20 விநாடிகள் கண்களுக்கு ஓய்வு அளிக்க வேண்டும் என்றும் மருத்துவர் பிரீத்தி தெரிவித்துள்ளார்.