மதுரை : மதுரை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பகுதிகளில் டைமர் உடன் இணைக்கப்பட்ட தெரு விளக்குகள் போடப்பட்டது . இதில், பல பகுதிகளில் பழுதாகி உள்ளது .
இதில் ஒரு பகுதியாக மதுரை பைபாஸ் சாலை, நேரு நகர் பகுதியிலுள்ள டைமர் பொருத்தப்பட்டுள்ள தெரு விளக்கு பழுதாகி உள்ளது கடந்த 10 நாட்களுக்கு முன்பு அப்பகுதி மக்கள் சுமார் 15-க்கும் மேற்பட்ட தெரு விளக்குகள் எரியவில்லை என மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து, மாநகராட்சி ஒப்பந்த அடிப்படையில் தெருவிளக்கு பராமரிப்பு செய்யும் தனியார் ஊழியர் அதன்பின் டைமர் சுவிட்ச் போர்டு போயுள்ளது .
வருவதற்கு ஒரு வாரம் ஆகும் அது வரைக்கும் தாங்கள் 6 மணிக்கு மேல் தெரு விளக்கை ஆன் செய்து எப்பொழுது நேரம் கிடைக்கும் பொழுது அப்பொழுது அனைத்து விடுங்கள் என சொல்லிவிட்டு சென்றுவிட்டார் .
தினசரி அப்பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் ஒரு இளைஞர் ஆபத்து தெரிந்தும் வேறு வழியின்றி தினசரி மாலை 6 மணிக்கு தெருவிளக்கு போட்டு வருகிறார் .ஒரு வாரத்தில் சரியாகி விடும் என நினைத்த இளைஞர் பத்து நாளுக்கு மேல் ஆகியும் இன்னும் சரி செய்யவில்லை என குமுறிக் கொண்டு தெரு விளக்கை மாலையில் செய்து ஆன் செய்து காலையில் ஆப் செய்து வருகிறார் .
கடந்த சில நாட்களுக்கு முன் ஸ்மார்ட் சிட்டிக்கு தெருவிளக்கு பொருத்துவதில் பல கோடி ரூபாய் மோசடி நடந்தது என குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தரமற்ற பொருட்களை வழங்கி சில நாட்களிலேயே பழுதாகும் நிலை உள்ளது எனவும் அதை சரிசெய்ய சரியான மாற்று உபகரணங்கள் இல்லை என்றும் சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் குற்றம்சாட்டுகின்றனர். மாநகராட்சி நிர்வாகம் சம்பந்தப்பட்ட தனியார் ஒப்பந்த நிறுவனத்திடம் உரிய விசாரணை நடத்தி தரமான உதிரிபாகங்கள் தான் பொருத்தப்பட்டுள்ளதா ஏன் இதுவரைக்கும் அதில் சரி செய்யப்படவில்லை என விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கையும் எழுந்துள்ளது.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி