தமிழக போக்குவரத்து துறை சார்பில், சென்னையில் தனியார் நிறுவனம் வாயிலாக வடிவமைக்கப்பட்ட முதல் மின்சார பேருந்து (Electric bus) 2019 ஆம் ஆண்டு சென்னை சென்ட்ரல் – திருவான்மியூர் வழித்தடத்தில் சோதனை ரீதியாக இயக்கப்பட்டது. சில நாட்கள் கழித்து அந்த பேருந்து சேவையை தமிழக அரசு நிறுத்தியது.
இந்த நிலையில் தற்போது மத்திய அரசு அனுமதி அளித்ததில் பேரில், மத்திய அரசின் ‘Energy Efficiency’ நிறுவனம் தமிழக அரசுடன் இணைந்து சென்னையில் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் பேட்டரியில் இயங்கும் மின்சார பேருந்துகளை இயக்க உள்ளது. தற்போது மத்திய அரசு 40 லட்சத்துக்கு மேல் மக்கள் தொகை உள்ள ஒன்பது நகரங்களில் மின்சார பேருந்துகளை இயக்க, மத்திய அரசின் ‘Energy Efficiency’ நிறுவனத்திற்கு அனுமதி அளித்துள்ளது.
இதன் அடிப்படியில் மஹாராஷ்டிரா, கர்நாடகா, தெலுங்கானா, தமிழ்நாடு, குஜராத், மேற்கு வங்கம் ஆகிய 6 மாநிலங்களில் உள்ள ஒன்பது நகரங்களில் மின்சார பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. தமிழகத்தில் உள்ள சென்னையில் மின்சார பேருந்துகளை இயக்க ‘Energy Efficiency’ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இது குறித்து மத்திய மின் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில் ” மத்திய அரசு மின்சார பேருந்தை இயக்க ‘Energy Efficiency’ நிறுவனத்திற்கு அனுமதி அளித்துள்ளது. மத்திய அரசின் அனுமதியின் அடிப்படையில் இந்த நிறுவனம் மின்சார பேருந்துகளை வாங்கும். ஒரே சமயத்தில் அதிக பேருந்துகளை வாங்குவதால், அந்த நிறுவனத்திற்கு குறைந்த விலையில் பேருந்துகள் கிடைக்கும்.
சென்னையில் மின்சார பேருந்துகளை இயக்குவது தொடர்பாக Energy Efficiency அதிகாரிகள் விரைவில் தமிழக போக்குவரத்து துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். அதன் பின்னர் தமிழக அரசு அனுமதிக்கும் வழித்தடத்தில் மின்சார பேருந்துகள் இயக்கப்படும் . டிக்கெட் கட்டணம், வருவாய் பங்கீடு உள்ளிட்டவை தொடர்பாக, அதிகாரிகளின் பேச்சுவார்த்தையின் போது முடிவு செய்யப்படும்.” என்று அவர் கூறினார்.
திருவள்ளூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஏழுமலை