காஞ்சிபுரம் : தொழிலாளர் காப்பீட்டு திட்டத்தின், கீழ் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு இந்த மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டு குறிப்பாக தொழிற்சாலைகள், தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிகளில் கட்டப்பட்டுகிறது. சென்னையை அடுத்துள்ள ஸ்ரீபெரும்புதூரில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. இ.எஸ்.ஜ.சி அங்கு சுமார் 3லட்சம் தொழிலாளர்கள், பணியாற்று கின்றனர். அங்கு மருத்துவ வசதிக்கு தனியார் அல்லது ஒரே ஒரு மருந்தகம் மட்டுமே இருந்தது. இதனால், முக்கிய மருத்துவ சேவைகளை தொழிலாளர்கள், பெற முடியாத நிலையில், மருத்துவமனை குறித்த கோரிக்கை எழுந்தது. இதைத் தொடர்ந்து, அங்கு, மருத்துவமனை கட்ட மத்திய, தொழிலாளர் வேலைவாய்ப்பு துறை அமைச்சகம் முடிவு செய்து. இதற்கான நிலத்தை ஒதுக்கித், தரும்படி தமிழக அரசிடம் மத்திய, அரசு கேட்டுக்கொண்டது.
இதற்கான பணியினை மத்திய தொழிலாளர், வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் திரு. பூபேந்தர்யாதவ், இந்தப் புதிய மருத்துவமனைக்கான அடிக்கல்லை நாட்டினார். நிகழ்ச்சியில் மத்திய தொழிலாளர், வேலைவாய்ப்பு மற்றும் பெட்ரோலியத் துறை இணையமைச்சர் திரு. ராமேஸ்வர் தெளி, மாவட்ட ஆட்சியர் திருமதி. ஆர்த்தி, ஆகியோரும் கலந்து கொண்டனர். 100 படுக்கைகள் கொண்ட, இந்தப் புதிய மருத்துவமனை கட்டுவதற்கு, ஸ்ரீபெரும்புதூர் வல்லம் வடுகை கிராமத்தில் 5.12 ஏக்கர் நிலம், ஓதுக்கப்பட்டுள்ளது. இங்கு தொழிலாளர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் உள்ளிட்டோர் 8 லட்சம், பேருக்கு அனைத்து வசதிகளையும், உள்ளடக்கிய மருத்துவமனை கட்டப்பட இருப்பதாக தொழிலாளர் வேலைவாய்ப்பு, அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
ரூ.155 கோடியில் அமையவுள்ள இந்த மருத்துவமனையில், அவசர சிகிச்சைப் பிரிவு, எலும்பு முறிவு சிகிச்சைப் பிரிவு, அல்ட்ரா சவுண்ட்ஸ்கேனர், போன்ற நவீன சிகிச்சை வசதிகள் மற்றும் பல் மருத்துவம், புறநோயாளிகளுக்கான சிகிச்சை பிரிவு ஆகியவை, அமைக்கப்படுவதாகவும் தெரிவிக்கத்தனர். தமிழகத்தில் இதுவரை இரு மருத்துவக் கல்லூரிகள் உள்ளிட்ட 10 மருத்துவமனைகள் நிறுவனத்தின் சார்பில், திறக்கப்பட்டுள்ளன. இதில் சென்னை கேகே நகர் மற்றும் திருநெல்வேலி, மருத்துவமனைகள் மட்டும் மத்திய தொழிலாளர், வேலைவாய்ப்புத் துறையின் இ.எஸ்.ஜ நிறுவனத்தால் நிர்வகிக்கப்படுகிறது. மீதமுள்ள 7 இஎஸ்ஜசி மருத்துவமனைகள் தமிழக தொழிலாளர் நலத் துறையாலும், கோவை இ.எஸ்.ஜ.சி மருத்துவக் கல்லூரி மாநில அரசின் சுகாதாரத் துறையின் சார்பிலும் நிர்வகிக்கப்படுகிறது. புதிதாகக் கட்டப்படவுள்ள ஸ்ரீபெரும்புதூர் மருத்துவமனை, மத்திய தொழிலாளர் நலத் துறையின் இ.எஸ்.ஜ.சி நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ராஜ் கமல்