திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த அத்திப்பட்டில் 75,ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் பாதயாத்திரை நடைபெற்றது. பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் மீஞ்சூர் வழியே பொன்னேரிக்கு பாதயாத்திரையாக சென்றனர். ஒன்றிய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் கிராமந்தோறும் பாதயாத்திரை நடைபெற்று வருகிறது.
பாதயாத்திரையின் போது ஒன்றிய அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பியபடியும் நாட்டின் சுதந்திரத்தை வைத்து பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்த்து வருவதையும், பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வு உள்ளிட்ட நடவடிக்கைகளை மக்களுக்கு எடுத்துரைத்தபடி பாதயாத்திரை சென்றனர். பாதயாத்திரை செல்லும் வழியில் உள்ள கிராமங்களில் காங்கிரஸ் கொடியினை எம்.எல்.ஏ திரு. துரைசந்திரசேகர், ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அவருடன் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு