திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சி சார்பில், ஒட்டுமொத்த தூய்மை பணி முகாம் நடைபெற்றது. பிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி நிகழ்ச்சி ஏற்பாட்டை 4-வது வார்டு கவுன்சிலர் ரஜினி ஏற்பாடு செய்திருந்தார். மீஞ்சூர் பேரூராட்சி 4-வது வார்டு உட்பட்ட அனைத்து பகுதிகளில் மீஞ்சூர் பேரூராட்சி தலைவர் திருமதி. ருக்மணி மோகன்ராஜ், தலைமை தாங்கினார். மீஞ்சூர் பேரூராட்சி துணைத் தலைவர் திரு.அலெக்சாண்டர், முன்னிலையில் மீஞ்சூர் பேரூராட்சி செயல் அலுவலர் வெற்றியரசு அனைவரையும் வரவேற்றார். பிலாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பது எனவும், தூய்மை நகரமாக பராமரிக்கும் வகையில் குப்பைகளை குப்பை தொட்டியில் மட்டுமே போடுவோம் என வணிகர்கள், பொதுமக்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
தொடர்ந்து வணிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பதாகைகளை ஏந்தியபடி பேரணி சென்றனர். தூய்மை நகரமாக பராமரிக்க கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டுபிரசுரங்களும் வினியோகம் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மீஞ்சூர் பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் திரு. நக்கீரன்,திருமதி. ஜெயலட்சுமி தன்ராஜ், திருமதி.குமாரி புகழேந்தி, திருமதி.கவிதா சங்கர், திருமதி. சங்கீதாசேகர், திருமதி. பரிமளா அருண்குமார், திரு. ராஜன், மற்றும் மேற்பார்வையாளர் ஆனந்தன் பேரூராட்சி அலுவலகங்கள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிவில் 4-வது வார்டு கவுன்சிலர் திரு. ரஜினி அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு