திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் அகில பாரதிய தேராபந்த் யுவக் பரிஷத், தேராபந்த் யுவக் பரிஷத் சென்னை மற்றும் ஸ்ரீ ஜெயின் சுவேதாம்பர் தேராபந்த் ட்ரஸ்ட் சபா மற்றும் மஹிளா மண்டல் சார்பில், மாபெரும் ரத்த தான முகாம் நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கினர். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் ரத்த வங்கியில் இருந்து வந்திருந்த மருத்துவ குழுவினர் ரத்தத்தை சேகரித்து ரத்த வங்கிக்கு கொண்டு சென்றனர். விபத்து அவசர சிகிச்சை, இருதய அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு அறுவை சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு இங்கு தனமாக வழங்கப்பட்ட ரத்தம் பயன்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு