திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் தேர்வு நிலை பேரூராட்சி 17-வது வார்டில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி பேரூராட்சி தலைவர் ரூக்மணி மோகன்ராஜ் தலைமையில், நடைபெற்றது. மக்கும் குப்பை மக்கா குப்பை குறித்தும்,கொசு ஒழிப்பு, மரச் செடிகள் வளர்த்தல், அதிகமாக பரவி வரும் காய்ச்சலை தடுக்கும் விதமாக நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. பின்பு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
இதில் பேரூராட்சி துணைத் தலைவர் அலேக்சாண்டர், செயல் அலுவலர் வெற்றியரசு மற்றும் வார்டு கவுன்சிலர்கள் குமாரி புகழேந்தி ரஜினி பரிமளா அருண்குமார் சங்கீதா சேகர் கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு பிளாஸ்டிக் குப்பை குறித்த பதாகைகளை ஏந்தி வீதி,வீதியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சி முடிவில் அப்பகுதி வார்டு கவுன்சிலர் திருமதி.மோனிகா ராஜேஷ் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு