சிவகங்கை : தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க தமிழகத்தில் அரசுப்பள்ளியில் பயிலும் மாணவ-மாணவியர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு எண்ணற்ற திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தி பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழ்கிறது. அத்தகையில் அரசுப்பள்ளி பயிலும் மாணவர்கள் அகில இந்திய நுழைவுத்தேர்வு போன்ற உயர்கல்விக்கு தயார் செய்யும் விதமாக உண்டு உறைவிட அரசு மாதிரிப்பள்ளியின் தமிழகம் முழுவதும் மாவட்டந்தோறும் தொடங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் சிவகங்கை மாவட்டத்தில் கீழ்க்கண்டனியில் பண்ணை பொறியியல் கல்லூரி வளாகத்தில் அரசு மாதிரிப்பள்ளியினை தற்காலிகமாக தொடங்கிட திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பள்ளியில் அக்டோபர் மாதத்திற்குள் 12ஆம் வகுப்பு பயிலும் உயிரியல், கணிதம் பயிலும் 80 மாணவ-மாணவியர்கள் பயிலவுள்ளனர்.
அதனை தொடர்ந்து நவம்பர் மாதத்தில் 11ஆம் வகுப்பு பயிலும் உயிரியல் பாடப்பிரிவு மற்றும் கணினி-கணிதம் பாடப்பிரிவு வகுப்பிலிருந்து 160 மாணவ-மாணவியர்கள் சேர்க்கப்படவுள்ளனர். அதற்கான முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் மாணவ-மாணவியர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகள் தங்கும் விடுதிகள் போன்றவைகள் தொடர்பாக அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப்பட்டு முடிவுறும் தருவாயில் உள்ளது. அரசின் அறிவுரையின்படி விரைவில் மாதிரிப்பள்ளி தொடங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் ப.மதுசூதன் ரெட்டி, தொிவித்துள்ளாா்.
இந்த ஆய்வின் போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆர். சுவாமிநாதன், சிவகங்கை மாவட்ட கல்வி அலுவலர் கோ. முத்துசாமி, மாதிரி பள்ளி தலைமை ஆசிரியர் ஆர். போஸ், உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் சீத்தாலெட்சுமி, முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் அருளானந்தம், ஒருங்கிணைப்பாளர் ஆர், காளிதாஸ் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.