சிவகங்கை : காரைக்குடி பழைய பேருந்து நிலையத்தில் கல்லூரி செல்வதற்காக காத்திருந்த மாணவ, மாணவிகளிடம் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு. எஸ்.மாங்குடி, அவர்கள் நேரில் சென்று விசாரித்த போது அவர்கள் கல்லூரி செல்வதற்கு சரியான நேரத்தில் பேருந்து விட வேண்டும். மற்றும் கூட்டம் அதிகமாக இருப்பதால் கூடுதலாக பேருந்துகளை இயக்க வேண்டும் எனவும் கூறினார்கள். உடனடியாக போக்குவரத்து மேலாளர் அவர்களை அழைத்து இதற்கான நடவடிக்கையினை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்தியுள்ளார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி