சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், ஒக்கூர் ஊராட்சியில் கட்டப்பட்டு வரும் முகாம் தமிழர்களுக்கான குடியிருப்புகளின் கட்டுமான பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ப.மதுசூதன் ரெட்டி, நேரில் சென்று பார்வையிட்ட ஆய்வு செய்தார். தமிழக முதலமைச்சர் மு. க.ஸ்டாலின், உத்தரவின் பேரில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் அனைத்தும் அனைத்து தரப்பு மக்களுக்கும் பயனுள்ள வகையிலும் இருந்து வருகிறது. அந்த வகையில் நமது அண்டை நாடான இலங்கையில் நெருக்கடியான சூழ்நிலைகள் காரணமாக பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு தமிழகம் வந்த வீரத்தமிழர்களின் நலனை காக்கின்ற வகையில் அவர்களின் தாய் தமிழாக திகழ்ந்து வருகிறது. தமிழகத்தில் உண்ணஉணவு, உடுக்கை உடை ,இருக்க இருப்பிடம் மற்றும் அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் தமிழர் அரசு வழங்கி பாதுகாத்து வருகிறது.
அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் தாயமங்கலம் ,காரையூர், மூங்கில் ஊரணி, சென்னாலக்குடி ,ஒக்கூர், தாழையூர் ஆகிய ஆறு பகுதிகளில் முகாம் வாழ் தமிழர்கள் வாழும் பகுதிகள் உள்ளது அப்பகுதியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கு என அரசுத்துறைகளுடன் உள்ளன தனியார் தொண்டு நிறுவனங்களின் பங்களிப்புடன் ஆய்வு மேற்கொண்டு அதனை ஆலோசனைக் குழுவின் மூலம் பரிசளித்து அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது சிவகங்கை மாவட்டத்தில் முகாம் வால் தமிழர்கள் மொத்தம் 1609 குடும்பங்கள் சார்ந்த 3242 நபர்கள் உள்ளனர் அதில் ஒக்கூர் ஊராட்சியில் மட்டும் 236 குடும்பங்கள் வசித்து வருகின்றனர் ஊராட்சியில் ஒரு குடும்பத்திற்கு 300 சதுர அடி வீடும் 20 சதுர அடி கழிப்பிடமும் என 320 சதுர அடி 88 தொகுப்பு வீடுகளும் இரண்டு தனி வீடுகளும் என புதியதாக 4.51 கோடி மதிப்பீட்டில் வீடுகள் கட்டித் தர தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன் கடந்த (31/07/2022), அன்று அடிக்கல் நாட்டினார். அதன்படி பணிகள் தொடங்கப்பட்டு சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது மேற்கண்டவாறு நடைபெற்று வரும் பணிகள் தொடர்பாக ஒவ்வொரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது அதனை தொடர்ந்து கட்டுமான பணிகள் நிலை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு பணிகள் விரைந்து தரமான முறையில் முடித்திட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் ப.மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார். இந்த ஆய்வின்போது ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறியாளர் வெண்ணிலா ,உதவி செயற்பொறியாளர் மாணிக்கவாசகம், ஒக்கூர் ஊராட்சி மன்ற தலைவர் பூமா அருணாச்சலம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெகநாதசுந்தரம் ரத்தினவேல் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி