சிவகங்கை: (24.01.2023), 2023 ஜனவரி 24 தேசிய பெண் குழந்தை தினத்தன்று மாவட்டத்தில், பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், அனைத்து பெண் குழந்தைகளும்(18), வயது வரை கல்வி கற்றலை உறுதி செய்யவும், பெண் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கவும், பெண் குழந்தை திருமணங்களைத் தடுக்கவும் பாடுபட்டு, வீரதிர செயல் புரிந்த (18) வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு தேசிய பெண் குழந்தை தின விருதுக்கான பாராட்டுப் பத்திரமும், ரூபாய் ஒரு இலட்சத்திற்கான காசோலையும் வழங்கப்பட உள்ளது.
மேற்படி, விருதிற்கு சிவகங்கை மாவட்டத்தில், கீழ்க்கண்ட தகுதியினை உடைய (13 ), வயதிற்கு மேல் (18), வயதிற்குட்பட்ட தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட பெண் குழந்தைகள் சிவகங்கை, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில் (28.11.2022), மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 13 வயதிற்கு மேல் 18 வயதிற்குட்ட தமிழகத்தில் வசிக்கும் பெண் குழந்தை (31 டிசம்பர்-ன்படி), பிற பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல், பெண் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண் குழந்தை திருமணத்தை தடுத்தல் மற்றும் தவிர்த்தல், வேறு ஏதாவது, வகையில் சிறப்பான தனித்துவமான சாதனை செய்திருத்தல், பெண்களுக்கு எதிரான சமூக அவலங்கள், மூடநம்பிக்கைகள் ஆகியவற்றிற்கு தீர்வு போன்றவைகளுக்கு வீர தீர செயல் புரிந்திருக்க வேண்டும் என, சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தெரிவித்துள்ளார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி