மதுரை: மதுரை டாக்டர்.எம்.ஜி.ஆர் பேருந்து நிலையத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், தீபாவளி பண்டிகை முடிந்து சென்னை மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு பொதுமக்கள் சிரமமின்றி பயணிக்க ஏதுவாக இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள் மற்றும் முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பாக, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களிலிருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு பொதுமக்கள் சிரமமின்றி பயணிக்க ஏதுவாக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டது. அதேபோல, தீபாவளி பண்டிகை முடிந்து திரும்பி செல்லும் பொதுமக்கள் வசதிக்காக சிறப்புப் பேருந்துகள் இயக்கிட நடவடிக்கை மேற்
கொள்ளப்பட்டுள்ளது.
அந்த வகையில், போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், மதுரை டாக்டர்.எம்.ஜி.ஆர் பேருந்து நிலையத்தில் சிறப்பு பேருந்துகள் மற்றும் முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
மதுரை எம்ஜிஆர் பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மதுரை கோட்ட முன்பதிவு விசாரணை மையம் மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழக முன்பதிவு விசாரணை மையங்களில் ஆய்வு செய்தார்கள். குறிப்பாக, முன்பதிவு செய்துள்ள பயணிகளிடம் பேருந்து வசதிகள் குறித்து ஆய்வு செய்தார்கள். மேலும், பயணிகளிடையே பேருந்து வசதிகள் குறித்து கருத்துக்களை கேட்டறிந்தார்கள். போக்குவரத்து துறை அமைச்சர் ஆய்வின் பொழுது தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மதுரை கோட்ட மேலாண்மை இயக்குனர் மற்றும் போக்குவரத்து கழக அதிகாரிகள் உடன் இருந்தார்கள்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி