கோவை தனியார் மஹாலில் தென்னிந்திய எலக்ட்ரோ ஹோமியோபதி மருத்துவர்கள் சங்க 4 வது மாநாடு நடைபெற்றது.
இதற்கு மதுரை மது இன்ஸ்டிடியூட் மெடிக்கல் சயின்ஸ் நிர்வாக இயக்குனர் டாக்டர் பரத் தலைமை வைத்தார்.வத்தலக்குண்டு அரஃபா ஹெல்த் கேர் நிறுவனர் டாக்டர் யூசுப் மௌலானா முன்னிலை வகித்தார். தென்னிந்திய எலக்ட்ரோ ஹோமியோபதி மருத்துவர் சங்க செயலாளர் ஆரோக்கிய பலம் வரவேற்றார்.இதில் சிறப்பு விருந்தினர்களான எம்.பி. ராஜேஷ்குமார்,நெல்லை டாக்டர் சேது சுப்பிரமணி, கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைப் பதிவாளர் டாக்டர் செல்வராஜ், கோவை விவசாய பல்கலைக்கழக விஞ்ஞானி டாக்டர் சுப்பிரமணியன்,டாக்டர் ஈஸ்வர ரமணன்,மதுரை வட்டார கல்வி இயக்குனர் அமுதா உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர்.
இம்மாநாட்டில் எலக்ட்ரோ ஹோமியோ மருத்துவம் கொரோனா தொற்று,புற்று நோய் உள்ளிட்ட அனைத்து வகை நோய்களையும் குணமாக்கும், எலக்ட்ரோ ஹோமியோ மருத்துவத்தை மத்திய, மாநில அரசுகள் அங்கீகரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மேலும் எலக்ட்ரோ ஹோமியோபதி மருத்துவம் படித்து முடித்த, 202 பேருக்கு பட்டமளித்து சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.இதில் தென்னிந்திய அளவிலான எலக்ட்ரோ ஹோமியோ மருத்துவர்கள், சுமார் 300 பேர்கள் கலந்து கொண்டார்கள்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி