மதுரை : மதுரை நகரில் கடந்த இரு தினங்களாக தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையால், மதுரை நகரில் உள்ள சாலைகள் குளம் போல காட்சியளிக்கின்றன. மதுரை மாவட்டத்தில், சோழவந்தான், வாடிப்பட்டி, அலங்காநல்லூர், சமயநல்லூர், பரவை, விளாங்குடி,தேனூர், திருப்பாலை, ஊர்மெச்சிகுளம், காஞ்சனா பேட்டை, அழகர் கோவில், பாறைப்பட்டி, கருப்பாயூரணி ,பூவந்தி, வரிச்சூர், திருமங்கலம், திருப்பரங்குன்றம் ஆகிய உள்ளடக்கிய பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. மதுரை நகரில் பல வார்டுகளில் தெருக்களில், மழை நீர் செல்ல வழி இல்லாமல், குளம் போல தேங்கியுள்ளன.
மதுரை நகரில் திருப்பாலை கிருஷ்ணன் கோவில் சாலைகள் அமைந்துள்ள ஆதிபராசக்தி நகர், மதுரை அண்ணா நகர், தாசில்தார் நகர், கோமதிபுரம் ,ஜூபிலி டவுன் ஆகிய பகுதிகளை சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல தேங்கி, சேரும் சகதியுமாக காட்சி அளிக்கிறது.
இது தொடர்பாக, மதுரை மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்று மழை நீரை உடனடியாக அகற்ற சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும், சாலைகள் மழை நீர் தேங்கியுள்ளதால், இருசக்கர வாகனத்தை சொல்வோரும் பாதசாரிகளும் அவதி அடைந்துள்ளனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி