மதுரை : மதுரை மாவட்டம் , பேரையூர் தாலுகாவில், உள்ள மேலப்பட்டி கிராமத்தில் தாழ்த்தப்பட்ட இன மக்கள் வசிக்கும் பகுதிகளில், மழை நீர் சூழ்ந்து வீட்டில் உள்ள பெண்கள், குழந்தைகள் வெளியேற முடியாதவாறு, வீடுகளைச் சுற்றி மழை நீர் சூழ்ந்துள்ளதால், விஷந்துகள் அடையும் அபாயம் உள்ளது என்றும், நீர்வரத்து ஓடைகளில் பலர் ஆக்கிரமித்து வீடு கட்டி வசித்து வருவதால், மழை நீர் ஓடையிலிருந்து வெளியேறி எங்கள் பகுதிக்குள் புகுந்து எங்களது குடியிருப்புகளை அச்சுறுத்தி வருவதாக தாழ்த்தப்பட்ட இன மக்கள். இது குறித்து, பல முறை மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டும், அரசு அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு, எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியப் போக்கில் இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர் . தற்போதும், டி. கல்லுப்பட்டி, பேரையூர் பேரூராட்சியில் இருந்து வருவாய்த்துறையினர் நேரில் பார்வையிட்டு ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்றாமல், அலட்சியப் போக்கில் இருப்பதாகவும், எங்களது வீடுகளைச் சுற்றியுள்ள மழை நீரை அகற்றுவதற்கு உண்டான நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனப் போக்கில் இருப்பதாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர். ஆகவே, மதுரை மாவட்ட ஆட்சியர், இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் கோரியுள்ளனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி