மதுரை : மதுரையில் கனமழை காரணமாக ஓடையில் வெள்ளப்பெருக்கில் எதிர்பாராத விதமாக சிக்கி உயிரிழந்த மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டம் டி.மேட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்த காயாம்பு (47), என்பவரது குடும்பத்திற்கு மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூபாய்-4 லட்சத்திற்கான நிவாரண உதவித் தொகைக்கான காசோலையை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி வழங்கினார். மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் ஆ.வெங்கடேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி