மதுரை : மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை வீதிகளில் கழிவு நீர் கொப்பளித்து வெளியேறும் அவலம். உலகப் பிரசித்திப்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகை புரிகின்றனர். இந்த நிலையில் கோவிலை சுற்றியுள்ள சித்திரை வீதிகளில் பெரும்பாலான பக்தர்கள் குழந்தைகள் வெறும் காலில் கிரிவலமாக செல்வது வழக்கம். இந்த நிலையில் அம்மன் சன்னதி அமைந்துள்ள கீழ சித்திர வீதியில் உள்ள பாதாள சாக்கடையிலிருந்து கழிவு நீர் கொப்பளித்து வெளியில் வந்து வீதி முழுவதும் துர்நாற்றம் வீசியும் வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வெளியூர் மற்றும் வெளி மாநில பக்தர்கள் முகம் சுளித்தவாறு கடந்து செல்கின்றனர்.மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி