மதுரை : மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தாலுகா கருப்பட்டி ஊராட்சியில் கம்மாளம் கிணறு அருகே மின்சார கம்பம் மீது கருவேளம் மரம் சாய்ந்து குடியிருப்பு வீடுகளுக்கு வழங்கப்பட்ட மின் இணைப்புகள் பாதிப்படைந்தது இந்த தகவலை அந்தப் பகுதி போஃர் மேன் திரு. மோட்ச ராஜன் அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. தகவல் தெரிவித்த உடனே சுமார் ஒரு மணி நேரத்திற்குள் மின்சார ஊழியர்கள் பத்து நபர்களை அழைத்து வந்து பழுதான மின்கம்பத்தையும், குடியிருப்பு வீடுகளுக்கு மின் இணைப்பையும் உடனடியாக வழங்கி உதவி செய்த மின்வாரிய அதிகாரி போஃர் மேன் திரு. மோட்ச ராஜன் அவர்களுக்கு கருப்பட்டி ஊராட்சி மக்கள் சார்பாகவும். என்னுடைய சார்பாகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.லெட்சர்கான் சாகுல் ஹமீது