மதுரை : மதுரை மாவட்டம், செக்கானூரணி அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள உண்டு உறைவிடப் பள்ளியை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு. ராஜகண்ணப்பன் ஆய்வு செய்து பள்ளி குழந்தைகளுடன் உரையாடினார். அதனை தொடர்ந்து பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வரும் இருபாலர் தங்கும் விடுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது மிக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் திரு.நந்தகோபால், கள்ளர் கல்வி கழக இணை இயக்குனர் திரு. செல்வராஜ் மற்றும் மதுரை புறநகர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் திரு. மணிமாறன், தலைமை செயற்குழு உறுப்பினர் திரு.முத்துராமன், ஒன்றிய கவுன்சிலர்கள் திரு. தனபாண்டியன், சுதாகரன் மற்றும் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் கணபதி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி